தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகின்றோம் என்றால் உங்கள் வீட்டில் டிவி பார்க்க கேபிள் சிறந்ததா அல்லது DTH சிறந்ததா என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து FOLLOW செய்து கொள்ளவும்
VIDEO LINK - CLICK
இந்தியாவைப் பொறுத்தவரையில் பல வழிகள் உள்ளன ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கேபிள் மற்றும் டிடிஎச் மட்டுமே காணப்படுகின்றது ஒன்று கேபிளில் பார்க்க வேண்டும் அல்லது டிடிஎச்சில் பார்க்க வேண்டும் சிலருக்கு கேபிள் வாங்குவதாஅல்லது DTH வாங்குவதா என்று குழப்பங்கள் நீடிக்கலாம் இந்த பதிவை படித்தால் அவர்களின் குழப்பம் தீரும்.
முதலில் விலை பொறுத்தவரையில் கேபிளில் வெறும் ₹300 ரூபாய் கட்டி வாங்கினால் போதும் நீங்கள் கேபிள் வேண்டாம் என்று சொன்னால் அந்த செட்டாப் பாக்ஸ் எடுத்துவிடுவார்கள் அதேபோல் தனியார் கேபிளில் எச்டி மற்றும் எஸ் டி செட்டாப் பாக்ஸ் வருகின்றன அவைகளை நீங்கள் விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் .ஆனால் டிடிஎச் பொறுத்த வரையில் நீங்கள் விலை கொடுத்து சொந்தமாக தான் வாங்க வேண்டும் வாங்கும்போது அதில் உங்களுக்கு எஸ்டி மற்றும் ஹச் டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும்
உங்களுக்கு கிடைக்க கூடிய சிக்னல் சிக்னலை பொறுத்தவரையில் டிடிஎச் மட்டும்தான் பெஸ்ட் ஆகக் காணப்படுகின்றது ஏனென்றால் நேரடியாக சேட்டிலைட் லிருந்து உங்கள் வீட்டிற்கு ரேடியோ அலைகள் மூலமாக சிக்னல் வருகிறது ஆனால் கேபிள் அப்படி கிடையாது ஏதோ ஒரு முக்கியமான இடத்திற்கு சேட்டிலைட் இல் இருந்து சிக்னல் வரும் அங்கிருந்து கேபிள் வழியாக உங்கள் வீட்டிற்கு டிஜிட்டல் மயமாக எடுத்து எடுத்து வருவார்கள் அந்த மாதிரி எடுத்துக் கொண்டு வரும் பொழுது நடுவில் வேறு எங்கேயாவது ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்று கேபிள் அறுந்தால் . உங்கள் வீட்டில் கேபிள் எடுக்காது அப்படி இருந்தும் நீங்கள் மாதாமாதம் பணம் கட்டி விடவேண்டும் கேபிளுக்கு .
அடுத்ததாக பேக்கேஜ் பொறுத்தவரையில் கேபிள் டிவியில் தமிழ்நாடு கேபிள் டிவி மட்டுமே குறைந்த பேக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளனர் அதே நீங்கள் தனியார் கேபிள் டிவி எடுத்துக்கொண்டால் அவர்கள் குறைந்த தொகையை இன்னமும் அறிமுகப் படுத்தப்பட வில்லை. இதே நீங்கள் டிடிஎச் வாங்க விரும்பினால் டிடிஎச்சில் பொறுத்தவரையில் ஏர்டெல் டிடிஎச் ,டாடா ஸ்கை நிறுவனங்கள் தங்களுடைய NCF ₹82 ரூபாய் குறைத்து மக்களுக்கு வழங்கி வழங்குகின்றது இந்த விஷயத்தை நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்
செட்டாப் பாக்ஸ் நீங்கள் வாங்கும் பொழுது அவர்கள் உங்களுக்கு வாரண்டி தருவார்கள் அதே டாக் டிவி கேபிள் பார்த்தீர்கள் என்றால் ₹300 ரூபாய் கட்டி செட்டாப் பாக்ஸ் மட்டும் வாங்கினால் வாங்கியதற்கு பின்னர் உங்களுக்கு கேபிள் வேணாம் என்றால் அந்த செட்டாப் பாக்ஸ் எடுத்து போய் விடுவார்கள் அதே நீங்கள் தனியார் கேபிள் சொந்தமாக தான் வாங்க வேண்டும். வேண்டாம் அவர்கள் எடுக்கமாட்டார்கள்.அதே நீங்கள் டிடிஎச்சில் வாங்கும்போது சொந்தமாக தான் வாங்க வேண்டும் மற்றும் ஹைச்டி செட்டாப் பாக்ஸ் உயர்ந்த தொழில் நுட்பத்தில் இப்போது வருகின்றது.அனைத்து வித டிடிஎச் நிறுவனங்களும் தருகின்றனர்
அடுத்ததாக நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் .டிராய் கொண்டு வந்த புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு சேனலுக்கும் தனித் தனியாக பணத்தை கட்டி பார்க்கக்கூடிய திட்டத்தை கொண்டு வந்தது. அதாவது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கொண்டு வந்தது. இது வந்ததற்கு பின்னர்தான் தனியார் கேபிள்கள் உதயம் ஆகின அதற்கு முன்னர் தமிழ்நாடு கேபிள் மட்டுமே இருந்தது
நெட்வொர்க் கெப்பாசிட்டி பீஸ் பொருத்தவரையில் டிடிஹச் மட்டும் தான் மிகவும் குறைத்து ₹82 ரூபாய்க்கு தருகின்றனர் .இது கேபிளில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ₹153 ரூபாய் தருவார்கள் டாக் டிவி கேபிள் தவிர மற்ற தனியார் கேபிள் டிவி நிறுவன ங்கள் நெட்வொர்க் கெப்பாசிட்டி பிசை குறைக்கவே இல்லை
TECH TV TAMIL தமிழ் சேனல் சார்பாக இது தான் வாங்க வேண்டும் இதுதான் வாங்கக்கூடாது என்று எந்தவித அறிவிப்பும் நாங்கள் சொல்லவில்லை அதாவது டிடிஎச் மற்றும் கேபிளில் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்ற விவரத்தை நாங்கள் சொல்கிறோம். உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் உங்களுக்கு சிக்னல் நன்றாக கிடைக்கவேண்டும் எப்போதுமே எங்கள் டிவி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் டிடிஎச் வாங்கிக்கொள்ளலாம் மற்றும் உங்களுக்கு சேனல்கள் அதிகமாக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கேபிளை வாங்கிக்கொள்ளலாம்.
அடுத்ததாக சேனல்கள் பொறுத்தவரையில் கேபிள் டிவியில் மட்டுமே அதிகப்படியான சேனல்கள் உள்ளன தமிழில் சேனல் என்று ஒன்று ஆரம்பித்தால் அது கேபிள் வழியாக தான் முதலில் வரும் டிடிஎச்சில் இல்லாத சேனல்களை கேபிள் காணப்படுகின்றது இந்த விஷயத்தில் கேபிள் மட்டுமே மிகவும் சரியான ஒரு தீர்வு அதை நீங்கள் டிடிஎச்சில் வாங்கினால் ஒவ்வொரு டிடிஎச்சிற்க்கும் சேனல்கள் மாறுபடும்.
உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை இந்த பதிவை படித்துவிட்டு வாங்கிக் கொள்ளவும் உங்களின் மேலான கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் தெரிவிக்கவும் நன்றி
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்