இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள் டிவி புதிதாக பல விதிமுறைகளை அதிரடியாக கொண்டுவந்தது..
இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுவிட்டது இவ்வாறு செயல்படுத்தப்பட்டு இருப்பதால் பார்க்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா மிகவும் அதிகமாகிவிட்டது
இதைக் கருத்தில் கொண்டு மீண்டும் டிடிஎச் மற்றும் கேபிள் டிவி இரண்டாவது முறை சட்ட திட்டங்களை கொண்டு வந்தது இதை டிடிஎச் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டாலும் சேனல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒன்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை
அதனால் பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததற்கு பின்னரும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவந்த இந்த விதிமுறைகளுக்கு எந்தவித தடையும் இருக்கவில்லை எனவே இந்த விதிமுறைகளை சேனல் நிறுவனங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்
இந்த விதி முறையானது மார்ச் மாதமே கொண்டுவரப்பட்டது இருப்பினும் சில நிறுவனங்கள் இதை நடைமுறை படுத்தவில்லை இதற்கு முன்னரே பிப்ரவரி 13 தனது அந்தந்த சேனல் நிறுவனங்களுக்கு கடிதம் ஏற்கனவே அனுப்பி விட்டது
டிராய் இந்த இரண்டாவது தடவை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதி முறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது அதாவது விலையை குறைக்க வேண்டும் சேனல் பேக்கேஜ்களில் அதிக விலை கொண்ட சேனல்களை இணைக்க கூடாது என்கின்ற பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது இது சேனல் ஒளிபரப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை
எனவே விலை குறைந்த சிறிய பேக்கேஜ்களை அதாவது விலை குறைந்த சேனல் பேக்கேஜ்களை நிறுத்த ஆரம்பித்துவிட்டனர். எடுத்துக்காட்டாக சொன்னால் சோனி நெட்வொர்க்கில் இப்பொழுது பல பேக்கேஜ்களை நீக்கியுள்ளனர் அதைப்பற்றிய வீடியோவும் ஏற்கனவே அதை அப்லோட் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க் கிளிக் செய்யவும்
இவ்வாறு சிறிய விலை கொண்ட பேக்கேஜ் நீக்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்ச விலை கொண்ட பேக்கேஜ்களை தேர்வு செய்வார்கள் என்று சில நிறுவனங்கள் இதை செய்யத் தொடங்கியுள்ளன.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆனது திட்டவட்டமாக சொல்லி விட்டது வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் அமலுக்கு வர வேண்டும் இல்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டது
இதனால் சேனல் நிறுவனங்களுக்கும் அவர்களின் விலை குறைந்த சேனல் பேக் திருத்த ஆரம்பித்துவிட்டனர் இன்னும் தமிழில் உள்ள எந்த ஒரு சேனல் நிறுவனமும் இந்த திட்டத்தை ஒப்புக்கொள்ளவில்லை ஜெயா டிவி நெட்வொர்க் மட்டுமே முழு விதிமுறைகளுக்கு ஆகியுள்ளது.
இதுபோல குறுக்கு வழிகளில் சேனல் நிறுவனங்கள் வேலை செய்வதால் இந்த டிராய் இரண்டாவது தடவை அமல்படுத்தப்பட்ட புதிய விதிமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சேனல் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது
now intha TRAI RULES NADAIMURAI IKKU VANDHU VITATHA ANNA TODAY 18-09-2020 solluga
ReplyDelete