FTA சேனல்கள் என்றால் என்ன இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் இதற்கு முன்னர் DTH மற்றும் கேபிள் இவைகளில் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தொகையை கட்டிக் கொண்டு வந்தோம் .
ஆனால் இப்போது அது போல் இல்லை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆனது புதிய விதிமுறைகளை அதிரடியாக DTH மற்றும் CABLE TV வகுத்தது
இதனால் மற்ற நாடுகளில் இருப்பது போல இலவச சேனல்கள் மற்றும் கட்டண சேனல்கள் என சேனல்கள் இரண்டாகப் பிரிந்தது. இந்த இரண்டாக பிரிந்ததில் இலவச சானல்கள் தான் இப்போது இருக்கக்கூடிய FTA டிவி சேனல்ஸ்
இதில் 100 ஏற்கனவே இலவசம் என்று சொல்லி இருந்தனர் அதேபோல் இப்பொழுது புதிய விதிமுறை அதாவது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இன் இரண்டாவது 2.0 விதி முறைகளில் 200 FREE சேனல் தரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது
200 இலவச சேனல்களில் தமிழ் சேனல்கள் இப்போது இருக்கக்கூடிய இலவச சேனல்கள் மட்டுமே வரும் கிட்டத்தட்ட 20 சேனல்களில் இருந்து 30 சேனல்கள் வரை மட்டுமே இலவச சேனல்கள் காணப்படுகின்றன இதில் முக்கியமாக நாம் பார்க்கக்கூடிய சன் டிவி கே டிவி விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் வராது இவை முற்றிலும் ஒரு PAID சேனல்
FTA சேனல்கள் இலவசம் என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் இதற்கு எதற்காக 153 ரூபாய் வசூல் செய்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம் அதற்கும் நான் பதில் கூறுகிறேன் அதாவது உங்களுக்கு சேவை வழங்குகின்ற DTH நிறுவனமானது அல்லது கேபிள் டிவி நிறுவன மானது SATLIGHT லிருந்து உங்கள் வீட்டிற்கு தெளிவான சிக்னலை அனுப்புவதன் மூலமாக தான் நீங்கள் எந்த நேரமும் தடை இல்லாமல் படத்தை பார்க்க முடிகின்றது
அந்த சிக்னல் தரத்திற்காக DTH நிறுவனத்திற்கு தான் நீங்கள் 153 ரூபாய் இந்த சிக்னலின் தரம் இருந்தால் மட்டுமே உங்கள் வீட்டில் அந்த இலவச சேனலை பார்க்க முடியும் இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்