தமிழக அரசின் இலவச கல்வி சேவை தொலைக்காட்சியான KALVI TV இனி மொபைலில் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் அதுவும் LIVE வாக பார்த்துக்கொள்ளலாம் இதைப் பற்றிய சந்தேகங்களை என்னிடம் அதிகமாக முன்வைக்கப்பட்டது அதற்கெல்லாம் பதில் அளிக்க கூடிய வகையில் இந்த பதிவு உங்களுக்கு அமைந்திருக்கும் தயவுசெய்து இந்த பதிவை உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் கண்டிப்பாக அவர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்
KALVI TV தொலைக்காட்சி தொடக்கத்தில் பெரிய பொருட்டாக பார்க்கவில்லை கல்வி தொலைக்காட்சியானது தமிழக அரசு கேபிள் டிவியில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு இருந்தது . அனைத்து விதமான மாணவர்களும் ஆன்லைன் கிளாஸ் அதாவது இணைய வழி கல்வியை தொடர அவர்களிடம் வசதி இல்லாதபோது அவர்களிடம் இருக்கக்கூடிய டிவியில் இந்த KALVI TV தொலைக்காட்சியை அந்த நேரத்திற்கு ஒளிபரப்பி மாணவர்களுக்கு பாடத்தை ஆசிரியர்கள் எடுத்து வந்தனர்
மிகப்பெரிய பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் முடங்கிப்போன அந்த காலகட்டத்தில் பள்ளி செல்வது இயலாத ஒரு காரியம் இதனால் ஆசிரியர்கள் தங்களது படங்களை KALVI TV வழியாக அனைத்து விதமான மாணவர்களுக்கும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்
KALVI TV யானது முதலில் TACTV யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது அதன் பின்னர் அனைத்து வகையான தனியார் மற்றும் அரசாங்க கேபிள் டிவி நிறுவனம் உட்பட அனைத்து வகையான கேபிள்டிவி நிறுவனங்களில் இந்த கல்வி தொலைக்காட்சி ஆனது ஒளிபரப்பப்பட்டது இது ஒரு இலவச தொலைக்காட்சி ஆகும்
SUN DIRECT , AIRTEL DTH ,TATA SKY DTH ,DISH TV DTH , VIDEOCON D2H போன்ற அனைத்து விதமான DTH களில் இந்த KALVI TV தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது
இந்த KALVI TV தொலைக்காட்சி LIVE ஆக மொபைலில் பார்க்க முடியுமா என்று சில வாடிக்கையாளர்கள் கேட்டு இருந்தார்கள் இப்போது தான் அந்த அம்சமானது கொண்டுவரப்பட்டுள்ளது அதாவது AIRTEL DTH நிறுவனத்தால் AIRTEL XTREME APP ஆண்ட்ராய்டு அப்ளிகேசனில் இந்த KALVI TV தொலைக்காட்சி கொண்டுவரப்பட்டுள்ளது அதற்குத் தேவையான ஆதார புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளத
ு
இதன் மூலமாக இனி கல்வியை ஒவ்வொரு மாணவரும் நீங்கள் எந்த ஒரு தொலை தொடர்பு நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டு இருந்தாலும் இந்த AIRTEL XSTREM APP அப்ளிகேஷன் வழியாக KALVI TV தொலைக்காட்சியை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பார்த்துக்கொள்ளலாம்
இந்த AIRTEL XSTREM APP டவுன்லோட் செய்ய கீழே உள்ள LINK கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்