VI ( VODAFONE + IDEA ) நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட PREPAID வாடிக்கையாளர்களுக்கு 1 GB டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிகிறது.
இலவச டேட்டாவுக்கு தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு VI தரப்பில் இருந்து குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கிறது. VI செயலியை கொண்டு கூடுதல் டேட்டா பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.
FREE DATA விளம்பர ரீதியில் வழங்கப்படுவதால், ஏழு நாட்களுக்கு பின் இது கிடைக்காது. ஏற்கனவே பயன்படுத்தப்படும் சலுகை தீர்ந்ததும், புதிய சலுகையை தேர்வு செய்ய FREE DATA பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக VI நிறுவனம் ZEE 5 சந்தா சலுகைகளை அறிவித்து இருந்தது.
ZEE5 சந்தா உள்ளடக்கிய VI சலுகைகள் விலை ரூ. 355 முதல் துவங்குகிறது. இத்துடன் புதிதாக ரூ. 351 சலுகையையும் VI அறிவித்தது. இதில் WORK FROM HOME சலுகை ஆகும். இதில் பயனர்களுக்கு 100 GB டேட்டா வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்