தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் சேனல்களை பணம் கொடுத்து பார்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் அனைத்துவித வாடிக்கையாளர்களாக உள்ளனர்
அதனால் எங்கேயாவது இலவச சேனல்கள் ஓடுமா அதற்கு ஏதாவது வழி உண்டா என்று பலரும் அதை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்
இதற்கு மாற்றாக நீங்கள் 6 அடி , 8 அடி , 10 அடி , 12 அடி போன்ற C BAND DISH பயன்படுத்தலாம் ஆனால் அதற்கு நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். செலவு செய்தால் கிட்டத்தட்ட 40 - ற்பதுக்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும் நீங்கள் பெரும்பாலும் பார்க்கக்கூடிய சன் டிவி, கே டிவி, ஜீ தமிழ் ,விஜய் டிவி போன்ற எந்த ஒரு சேனலும் அதில் எப்போதுமே பார்க்க முடியாது
இலவச CHANNEL அதாவது FREE TO AIR CHANNELS மட்டுமே பார்க்க முடியும் இதற்கு 15,000 வரை கூட செலவாகலாம் செலவு செய்ய நீங்கள் தயாராக இருந்தால் C - BAND DISH நீங்கள் போட்டுக் கொள்ளலாம்
இதைப் பற்றிய தகவல் உங்களுக்கு வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்
C - BAND நீங்கள் செலவு செய்ய தயாராக இல்லை என்றால் தாராளமாக 2 அடி அளவு கொண்ட சாதாரண KU - BAND DISH நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் கிட்டத்தட்ட 2 தமிழ் சேனல்கள் மட்டுமே தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றது பழைய செட்டாப் பாக்ஸ் ஆக இருந்தால் பொதிகை மட்டுமே ஓடும் புதிதாக வந்திருக்கக்கூடிய MPEG 4 செட்டாப் பாக்ஸ் நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு SUN NEWS இதில் ஓடும்
பொதிகை மற்றும் சன் நியூஸ் மட்டுமே உங்களுக்கு போதும் என்றால் செலவு ₹1500 ரூபாய்க்கு உள்ளே தான் இருக்கும். ஒருமுறை செலவு செய்தால் இந்த இரண்டு சேனல்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்
இதைப் பற்றிய தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்