நண்பா்களே இந்தியா நாட்டின் மத்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதியின் கீழ் செயல்படும் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான DD LUCK SABA மற்றும் DD RAJIYA SABA ஆகிய பாரளமன்றத்தின் தொலைக்காட்சிகள் புதிய வடிவில் புதிய மாற்றத்துடன் தனது ஒளிபரப்பை ஒன்றினைத்து ஒரே தொலைக்காட்சியாக தொடங்கி உள்ளது.
SANSAND டிவி என்ற பெயாில் புதிய ஒளிபரப்பை பாரத நாட்டில் தொடங்கியுள்ளது.கடந்த பல வருடங்களாக பாரளமன்றத்தின் கூட்டத்தொடா்களை இவ்விரண்டு தொலைக்காட்சிகளின் முலம் மட்டும் காண முடிந்தது.தற்சமயம் SANSAND டிவி அதிநவின தொழில்நுட்பமான HD மற்றும் SD ஆகிய வடிவில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இந்தியாவின் G SAT 10 செயற்கைகோளில் SANSAND டிவி HD G SAT 30 செயற்கைகோளில் SANSAND SD ஒளிபரப்பாகிறது.
தொலைக்காட்சியினை காண MPEG4/DVB S2 -HD 4 தொழில்நுட்பம் பொருந்திய SET TOP BOX கொண்டு நிகழ்ச்சிகளை காணலாம்.SANSAND டிவியில் பாரளமன்ற நிகழ்வுகளை தவிர நாட்டின் முக்கிய நிகழ்வுகள் தொடா்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறது.நாட்டின் அனைத்து CABLE TV and DTH இத்தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான மத்திய அரசாணையும் ஒளிபரப்பு ஆணையம் TRAI வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் இலவச ஒளிபரப்பு சேவையான DD FREE DISH DTH சன்சாட் டிவி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.SANSAND டிவியின் 24 மணி நேர ஔிபரப்பை இந்திய பிரதமா் மாண்புமிகு நரேந்திர மோடி அவா்கள் செப்டம்பா் மாதம் 15 2021 ஆண்டில் தொடங்கி வைத்தாா்.
No comments:
New comments are not allowed.